கொல்கத்தா: பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் நம் நாட்டையும், மக்களையும் கொள்ளையடிக்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. “நாட்டுக்கு நல்லது எதுவோ அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்
ஆகவே எங்களின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்” என்று பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், தனது ‘ஃபேஸ்புக்’ தளத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் மம்தா.
“பொதுவாக சீர்திருத்தம் என்றால் அது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். முக்கியமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வை வளம் பெறச் செய்வதாக இருக்கும். ஆனால் இப்போது பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களையும், நமது தேசத்தையும் கொள்ளையடித்து வருகின்றனர்”என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து மம்தா பானர்ஜியின் கட்சி, மத்திய அரசில் இருந்து விலகியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக