புதுடெல்லி : வாடிக்கையாளரின் அனுமதியில்லாமல் காலர் டியூன் சேவையை ஆர்டிவேட் செய்த செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு நுகர்வோர் நீதிமன்றம் கண்டனத்தையும், அபராதத்தையும் விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவர் வோடாபோன் நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; “வோடாபோன் நிறுவனம்
கடந்த 2008ம் ஆண்டு என் அனுமதியின்றி எனது போனில் காலர் டியூன் சேவையை ‘ஆக்டிவேட்’ செய்தது. இதற்காக எனது செல்போனில் இருந்து 50 ரூபாயை பிடித்தம் செய்து கொண்டது. இதுகுறித்து வோடாபோன் நிறுவனத்திடம் பல முறை விளக்கம் கேட்டும் பயன் இல்லை. எனவே அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் வோடாபோன் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் ராஜேந்திர யாதவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், சிரமங்களுக்கும் ஈடாக அவருக்கு வோடாபோன் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
காலர் டியூன் சேவைக்கு பிடித்தம் செய்த 50 ரூபாயையும் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக