தமிழகத்தில் மின்வெட்டு பூதாகரமான பிரச்னையாக உள்ள நிலையில், இந்த மின் தட்டுப்பாடு இன்னும் ஏழுவருடம் நீடிக்கும் என்று பகீர் செய்தி வெளியாகியுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின்தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது. அதில்" எரிபொருள், நீர், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வழித்தட
இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிரமங்களாலும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளாலும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து நிலக்கரியை கொண்டுவருவதில் ஏற்படும் சவால்களாலும் மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கட்டுமான பணிகளில் ஏற்படும் தாமதத்தாலும்
மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் சிக்கல்கள் ஏற்படுவதாக ஒப்புதல் அறிக்கை போன்று கூறப்பட்டுள்ளது.
திட்டங்களை செயல்படுத்த வசதி செய்வதற்கு இரண்டு ஆண்டுகளும், திட்டங்களை உருவாக்க ஐந்து ஆண்டுகளும் என்று மொத்தம் ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது . பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மலிவான விலையில் தரமான, தடையில்லா மின்சாரம் வழங்குவதே தங்கள் லட்சியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக