செவ்வாய், அக்டோபர் 09, 2012

அமெரிக்கா: கோர்ட்டுக்கு வந்த அரசு வழக்கறிஞரின் பாக்கெட்டில் கஞ்சா !

கோர்ட்டுக்கு வந்த அரசு வக்கீலின் பாக்கெட்டில் இருந்து கஞ்சா சிகரெட் கீழே விழுந்தது. அதை பார்த்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து அழைத்து சென்றனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகர் அரசு வக்கீல் ஜேசன் கேன்ரல் (43). லூசியானாவில் 16 ஆண்டு வக்கீலாக பணியாற்றினார். 2009ம் ஆண்டில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நகர அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணையின்
போது கடந்த வாரம் கோர்ட்டுக்கு வந்திருந்தார் ஜேசன். 

அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து கஞ்சா சிகரெட் கீழே விழுந்தது. அதை பார்த்த போலீசார் உடனே அவரை கைது செய்தனர். அத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜேசனின் மனைவியும் நியூ ஆர்லியன்ஸ் கவுன்சில் தேர்தல் வேட்பாளருமான லாடொயா கூறுகையில், ஜேசனின் நடவடிக்கை ஆத்திரத்தை வரவழைக்கிறது. ஏமாற்றம் அளிக்கிறது. சட்டபூர்வ நடவடிக்கைகளை அவர் சந்தித்தாக வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக