வியாழன், ஜனவரி 03, 2013

TNTJ போராட்டம் ஒத்திவைப்பு !

காவல்துறை அதிகாரிகள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், டிசம்பர் 3ந்தேதி "சிறை நிரப்பும் போராட்டம்" நடைபெறும் என TNTJ அறிவித்திருந்தது. அது, தற்போது         10 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியாவது: கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார்
கிளைத் தலைவர் யாகூப் அவர்களை வீடு புகுந்து கைது செய்து, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், அன்று மாலை 4 மணிக்கு இதற்கு நியாயம் கேட்க அணி திரண்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதற்கு காரணமாக இருந்த துணை ஆணையாளர் கிரி மற்றும் உதவி ஆணையாளர்கள் செந்தில் குமரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்வரும் 03.01.2013 வியாழன் அன்று ஒரு லட்சம்பேர் பங்கு பெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், மாநில நிர்வாகிகளிடம் ஒரு வாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததை ஏற்று, இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10.01.2013 வியாழன் அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநித் தலைமையகம், சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக