மகாராஷ்டிர மாநிலம் "பீவண்டி" சமத் நகரில், கோவிலை இடித்ததாக வதந்தியை பரப்பி, கலவர சூழலை உருவாக்கிய "பீவண்டி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ." உள்ளிட்ட 25 சங்கபரிவாரங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பீவண்டி "குமார்வாடா" காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்.சி.பாட்டீல், இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 தினங்களுக்கு முன், கோவிலை இடித்ததாக வதந்தியை பரப்பி, பதற்றமான சூழலை உருவாக்கிய "பா.ஜ.க." மற்றும் "சிவசேனை" கட்சியை சேர்ந்த "ரூபேஷ் மஹாத்ரே" எம்.எல்.ஏ. உள்ளிட்ட
25 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 2 முஸ்லிம் இளைஞர்களும் விடுவிக்கப்படுகின்றனர். ஹேமந்த் என்ற பாலகிருஷ்ணன் மற்றும் முகேஷ் ஷங்கர் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை, கட்டிட விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், அவர்களே அகற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிவசேனை கட்சியினர் திரண்டுவந்து கோவிலை முஸ்லிம்கள் இடித்து விட்டனர், எனக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து, யோகேஷ் ஷங்கர் என்பவரிடமிருந்து எழுத்துப்பூர்வ புகார் பெற்று, இரு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்,காவல் அதிகாரி பாட்டீல்.
விசாரணையில் முஸ்லிம்கள் "அப்பாவிகள்" என தெரியவந்தது.
திட்டமிட்டு கலவரத்தை தூண்டிய "பீவண்டி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ." உள்ளிட்ட 25 சங்கபரிவாரங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனியாருக்கு சொந்தமான கோவில் என்பதால், அதுகுறித்த ஆவணங்கள் எதுவும் அரசிடம் இல்லை.
என்றாலும் இதுபோன்ற கோவில்களை, அப்புறப்படுத்தும்போதும் - இடமாற்றம் செய்யும்போதும் உரிய அனுமதி பெறவேண்டும் எனக்கூறிய அவர், அனுமதி பெறாமல் கோவிலை அகற்றிய உரிமையாளர்கள், வேலையாட்கள் ஆகியோரை விசாரித்ததுடன், கோவிலை இடிக்க பயன்படுத்திய கடப்பாரைகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார், "குமார்வாடா" காவல் நிலைய பொறுப்பாளர் ஆர் சி பாட்டீல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக