இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெற்றுவரும் சம்பவங்கள குறித்து, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இனி பாகிஸ்தானுடன் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கையுடம் இந்தியா ஈடுபடாது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா ரப்பானி, இந்தியா பாகிஸ்தானுடனான சுமூகமான முறையில் சமாதானமாக செல்ல இயலாது என கூறப்படும் கருத்து தனக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான விரோதத்தை அதிகரிக்கும் விதத்தில் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு கொண்டு கருத்து தெரிவிப்பதாகவும், இந்த கருத்துகள் அனைத்தும் எல்லை பகுதியில் போரை தூண்டுவதற்காக தெரிவிக்கபடுகின்றன என்றும் கூறினார்.பாகிஸ்தானை பொருத்தவரையில், இந்தியாவுடன் தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக கூறிய அவர், நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பியவுடன் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக