பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் ஃபவுசி தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் தீவிரவாத புத்த அமைப்பான பொதுபல சேனா முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.மஸ்ஜித் தாக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் ஜெயரத்னே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கையில் இனி மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெருமாள், ஃபவுசி உட்பட பல அமைச்சர்கள் பங்குபெற்றுள்ளனர்.
புத்த மதத் தலைவர்களும் பங்குபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், மத ஒற்றுமை ஏற்பட்டு இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஃபவுசி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கமப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் ஃபவுசி கூறுகிறார்.
இதனிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, நாடாளுமன்றத்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் கோரினர் என்று அமைச்சர் ஃபவுசி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக