திங்கள், ஜூன் 09, 2014

அமலாபால்- விஜய் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ளசெயிண்ட் ஜூட்தேவாலயத்தில் நடந்தேறியது


எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி இயக்குனர் விஜய்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இவர்களது நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது. பல பிரபலங்கள் இவர்களது நிச்சயதார்த்தத்தில் கலந்துக் கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.

நேற்று கொச்சியில் உள்ளசெயிண்ட் ஜூட்தேவாலயத்தில் நடந்தேறிய இவர்களது நிச்சயதார்த்தம் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. அமலாபால் வெள்ளை நிற உடையிலும் இயக்குனர் விஜய் கிரே வர்ணத்திலும் வந்து வந்திருந்தவர்களைக் கவர்ந்தனர். கிறிஸ்தவமுறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.

கிருஸ்துவரான அமலாபால் திருமணத்திற்குப் பிறகு இந்து மதத்திற்கு மாறுவாரா அல்லது இந்துவான இயக்குனர் விஜய் கிருஸ்துவ மதத்திற்கு மாறுவாரா என பலரிடையே பல கேள்விகள் எழும்பின. இவை அனைத்தும் இவர்களது நிச்சயதார்த்தம் விடை கொடுத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக