கடந்த 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்பெய்ன் மற்றும் நெதர்லாந்து ஆகிய இதே அணிதான் களமிறங்கின. அப்போதைய போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெய்ன்.
ஆனால், அந்த 4 ஆண்டுகள் பகையைத் தீர்த்து கொண்டது போல் அமைந்திருந்தது நெதர்லாந்து அணியின் நேற்றைய அசுரத்தனமான ஆட்டம். 1-5 என்ற கோல் எண்ணிக்கையில் நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்த ஸ்பெய்ன் உலக காற்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே காலை 6 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது பி பிரிவு ஆட்டத்தில் சிலி மற்றும் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இப்போட்டியில் சிலி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.
இதனிடையே நள்ளிரவில் நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோவும் கெமரூன் அணியும் களமிறங்கின. இவ்வாட்டத்தில் மெக்சிகோ 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் கெமரூன் அணியை வீழ்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக