பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள 'ஏர்ஆசியா' நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம் குறைவான கட்டணத்தில் பயணிகளுக்கு பறக்கும் அனுபவத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ள 'ஏர்ஆசியா' கடந்த 12-ம் தேதி பெங்களூரு-கோவா நகரங்களுக்கிடையே அன்றாட வழித்தட சேவையை தொடங்கியது.
வரும் 19-ம் தேதி பெங்களூரு-சென்னை இடையே அன்றாடம் இருமுறை என இருவழிப் பாதை வழித்தட சேவையை தொடங்கவுள்ளது.
இவ்வரிசையில், மூன்றாவதாக பெங்களூரு-கொச்சி இடையே அன்றாட இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அளவிட்ட சலுகையாக இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக