எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராயபுரத்தில் அக்கட்சியின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள், இரத்தானம், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு புத்தாடை, உணவு வழங்குதல், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை செய்துவருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (27-06-2014) அக்கட்சியின் இராயபுரம் தொகுதி கமிட்டி சார்பாக ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் முதல் ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை தொழிலாளர்களுக்கு வியாரம் செய்யும் வகையில் தள்ளுவண்டிகள், சைக்கிள் ரிக்ஷாக்கள், மூக்கு கண்ணாடிகள், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், உதவித் தொகைகள், மருத்துவ உதவிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு இராயபுரம் தொகுதி தலைவர் கோல்டு ரஃபிக் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவையை கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தொடங்கிவைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.கே.கரீம், துணைத் தலைவர் அப்பாஸ், செயலாளர் கோபிநாத், கேப்டன் முன்னா, தொகுதி துணைச் செயலாளர் புஷ்பராஜ், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சேக் முகம்மது, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் செயிண்ட் மேரிஸ் பள்ளி தாளாளர் மார்டின் கென்னடி, லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் நிரஞ்சன், ஏ.வி மருத்துவமனை மருத்துவர் பக்ருதீன் பள்ளி தாளாளர் மற்றும் டாக்கடர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெண்கள், மாணவ மாணவிகள் உள்பட சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக