ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் தலைநகரில் செய்னே மற்றும் லோரே ஆறுகளின் நடுவில் மரப்பாலம் ஒன்று உள்ளது. இந்த மரப்பாலத்துக்கு ‘பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
2.4 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தின் பக்கவாட்டில் பல காதல் பூட்டுகள் தொங்க விடுவது வழக்கம். இந்த பாலத்தின் அருகே எப்பொழுதுமே காதலர்கள் கைக்கோர்த்து காற்று வாங்கிக்கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்றானது.
காதலர்களுக்கென அமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த பாலத்தில் காதலை தங்களுக்கு பிடித்தவருடன் தொடர வேண்டும் என கோரி இந்த மரப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பல வண்ண நிறங்களில் பூட்டுகள் தொங்க விடப்படும்.
காதலர்கள் பூட்டுகளைத் தொங்க விட்ட மறுகணம் அதன் சாவியை அருகில் இருக்கும் ஆறில் வீசி விடுவர். இதுவரை இலட்சக்கணக்கான காதல் பூட்டுகள் தொங்க விடப்பட்டதில் அண்மையில் இந்த பாலம் உடைந்து விழுந்தது.
இதனால் வருத்தமடைந்த காதலர்களின் நிலையைக் கண்ட பாரீஸ் நிர்வாகத்தினர், பாலத்தை உடனடியாக சரி செய்து மீண்டும் காதலர்கள் முன்பு போலவே பூட்டுகளைத் தொங்க விட அனுமதித்துள்ளது. இதனால் காதலுக்கு பிரசித்தி பெற்ற பாரீஸ் நகர காதலர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக