திங்கள், டிசம்பர் 24, 2012

மதுரை கலெக்டரின் நோட்டீஸ் ராமதாஸ் வீட்டு கதவில் ஒட்டப்பட்டது!

சாதிக் கலவரங்களை தூண்டும் வகையில் மதுரையில் பேசியதற்காக,அம்மாவட்டத்துக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேட்டு, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அனுப்பிய நோட்டீஸ் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வீட்டுக் கதவில் ஓட்டப்பட்டது. மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில்,"பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 20 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

இதற்காக வரும் 26 ஆம் தேதி, ஆட்சியர் முன்பும், மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பும் ராமதாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால், இரண்டு மாதத்துக்கு அவர் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைசட்டம் பிரிவு 144 ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டிருந்ததுது.  இந்த நோட்டீஸ் மதுரையிலிருந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு வந்தது.அதை அவர் திண்டிவனம் தாசில்தார் கோபால்சாமிக்கு அனுப்பினார்.அவர் திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசின் வீட்டுக்கு சென்றபோது அவர் இல்லை. 

இதையடுத்து வானூர் தாசில்தார் குமாரபாலனுக்கு அனுப்பப்பட்டது.அவர் நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் வீடு அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 

அதில் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கலெக்டர் முன் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த அவர், கடந்த 20 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் மதுரையில் நடந்த கூட்டத்தில்,குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி, கருத்து வெளியிட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ராமதாஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

வரும் 26 ஆம் தேதி, ஆட்சியர் முன்பும், மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பும் ராமதாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால், இரண்டு மாதத்துக்கு அவர் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அன்சுல் மிஸ்ரா மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக