புதன், டிசம்பர் 26, 2012

ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாபுச் சட்டம்! – உ. பி. அரசு முடிவு!

ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் அனைவருக்கும் பயம் வரும் என உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை இன்னும் கடுமையாக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதுஉத்தரபிரதேச முதல் மந்திரியாக அகிலேஷ் யாதவ், பதவி ஏற்று 10 மாதங்கள் ஆகின்றன. இந்த 10 மாதங்களில் அம்மாநிலத்தில் 40 மைனர் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் காமுகர்களால் கற்பழிக்கப்பட்டு சின்னாபின்னமாகி உள்ளனார்.

இவர்களில் பலர், போலீசில் புகார் அளிக்கவே பயந்த நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியே சொல்லாமல், தங்களுக்குள்ளாகவே போட்டு புதைத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் பற்றி புகார் அளிக்க ’1090′ என்ற சேவைமைய தொலைபேசி எண்ணை, அம்மாநில முதல்மந்திரி அகிலேஷ் யாதவ் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
கடந்த 1 மாத காலத்தில் மட்டும் இந்த சேவை மைய எண்ணுக்கு 61 ஆயிரம் பெண்கள் தொடர்பு கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்துள்ளனர். இதில் 15 ஆயிரம் பெண்கள், முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்துவரும் ‘நச்சரிப்பு’ செல்போன் அழைப்புகளைப் பற்றி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் 10 வயது சிறுமியை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒருவனுக்கு ரேபரேலி நீதி மன்றம் 2 நாட்களுக்கு முன்னர் மரண தண்டனை விதித்துள்ளது.
இதன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து 1 வருடம் சிறையில் அடைக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே இந்த சட்டத்தின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநிலத்தின் உள்துறை செயலாளர் ஜே.பி.குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக