திங்கள், டிசம்பர் 24, 2012

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை அமோகம் !

துப்பாக்கி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுவடைந்து வரும் அதே நேரத்தில் அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த மாதங்களில் சீக்கிய கோயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு, கடந்த வாரம் ஆரம்ப பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களையடுத்தும் துப்பாக்கி விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய புலானாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் நோக்கில், துப்பாக்கிகளை விற்கும் சிறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், அமெரிக்காவின் தொடர் வணிக நிறுவனங்களான டிக் ஸ்போர்ட்டிங் குட்ஸ் (Dick's Sporting Goods) தனது 480 கிளைகளிலும் செமிஆட்டோமெட்டிக் (semiautomatic) துப்பாக்கிகளின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதேபோல், மற்றொரு தொடர் வணிக நிறுவனமான வால்மார்ட்டும் ஆன் லைன் மூலமாக துப்பாக்கிகள் பதிவு செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ளது.
எனினும் சிறிய அளவிலான கடைகள் துப்பாக்கிகளை பெருமளவில் விற்பனை செய்து வருகின்றன.
பெருகி வரும் ஆபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவே துப்பாக்கிகளை வாங்குவதாக பொதுமக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், முன்கூட்டியே அவற்றை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் ஒருசிலர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக