பசிக்கு உணவளிக்கும் பிரெஞ்சு பொதுநல அமைப்பு ஒன்று பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பிரான்சில் அதிகரித்துவரும் வறுமை காரணமாக உணவு கேட்டுவருவோர் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்திருப்பதாக Restaurants with Heart என்ற பொதுநல அமைப்பின் தலைவரான ஒலிவியர் பெர்த்தா தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 100,000 பேருக்கு தாங்கள் உணவளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்த எண்ணிக்கையை "உயர்வு" என்ற சொல்லால் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. பட்டினியால் வாடுவோர் வெள்ளமெனப் பெருகி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
"இப்போது எங்களுக்கு கொடையாளிகள் கொடுத்து உதவவில்லை என்றால் எங்களால் இந்த உணவளிக்கும் அறப்பணியை தொடர இயலாது", என்றார்.
கடந்த வருடம் இந்த வருடமும் மழை, பனிக்காலங்களில் 11.5 மில்லியன் உணவுப்பொட்டலங்களை இந்தப் பொதுநல அமைப்பு வழங்கி உள்ளது.
இது 1985ம் ஆண்டில் வெறும் 8.5 மில்லியனாக மட்டுமே இருந்தது.
இந்தப் பொதுநல அமைப்பை பிரெஞ்சு சிரிப்பு நடிகர் கோலுஷ் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக