செவ்வாய், டிசம்பர் 25, 2012

TNTJ வினர் மீது தடியடி களத்தில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் !

கடந்த வாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக டிசம்பர்-21ல் உலகம் அழியாது என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு எதுராக இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டுகின்றனர்` TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டீஸ் வெளியிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கி செயல்பட்டனர்.  கலவரக்காரர்களான இந்துத்துவ பயங்கர வாதிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை காவிகளின் துரையாக மாறி முஸ்லிம்களை பயங்கர வாதிகளை போல் சித்தரித்து, நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை கேவலமாக பேசி, அராஜகம் செய்து விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்த TNTJ நிர்வாகிகளை D1 கா(வி)வல் நிலைய AC செந்தில் குமார் கைது செய்துள்ளார்.

இதை கண்டித்து AC செந்தில் குமரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூறி D1 காவல் நிலைய முற்றுக்கை போராட்டம் (இன்று) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு TNTJ அமைப்பால் அறிவிக்க பட்டதை தொடர்ந்து மக்கள் வர தொடங்கினர். அறவழியில் ஆண்கள், பெண்கள் போராட்டக் களத்தில் இருக்க கா(வி)வல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயிற்சித்துள்ளதுடன் சில சகோதரர்களை கைதும் செய்துள்ளனர்.

தடியடி நடத்தி கைது செய்த, தகவல் அறிந்த உடனே INTJ மாநில நிர்வாகிகளான S.M. செய்யது இக்பால், K.P.M. முஹம்மது முஹ்யித்தீன், ஃபிர்தௌஸ் கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் காவல்துறை முஸ்லிம் சமுதாயதை சீண்டி பார்த்துள்ளது. உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கும் எங்கள் சகோதரர்களை விடுதலை செய்ய வில்லையானால் தமிழகம் தழுவிய அளவில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

TNTJ மாநில செயலாளர் எக்மோர் சாதிக் இப்பிரச்சனைக்கும் மற்ற அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆகையால் பிரச்சனையை பெரிது படுத்தாமல் மற்ற அமைப்பினர் களைந்து சென்று விடுமாறு கூறினார். 

இதையடுத்து அங்கு வந்த மீடியா களிடத்தில் பேட்டி அளித்த INTJ பொது செயலாளர் S.M. செய்யது இக்பால் மத அமைதியை கெடுத்து, மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த இந்துத்துவ பயங்கர வாதிகளையும், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளையும் கண்டித்து, இப்பிரச்சனையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லையானால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தார்.

இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை, இப்பிரச்சனையை தம் அமைப்பு ரீதியிலான பிரச்சனை என்று பார்க்காமல் சமுதாய ரீதியிலான பிரச்சனையாக பார்த்து INTJ உடன், ஒன்றுனைந்து போராட சம்மதித்தால் கைக்கோர்த்து போராட INTJ தலைமை தயார், என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக