திங்கள், டிசம்பர் 31, 2012

மலேகான் குண்டுவெடிப்பு:குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதி கைது !

புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் குண்டுவைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டது குறித்து சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து முதல் கைது சம்பவம் நடந்துள்ளது.

மலேகானில் குண்டுவைக்க சதித்திட்டம் தீட்டியதுடன், குண்டையும் வைத்த மோகன் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ, மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஹதோரில் வைத்து கைது செய்துள்ளது. மும்பைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மோகனை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர்8-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியானார்கள். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ராஜேந்தர் சவுத்ரியிடம் விசாரணை நடத்தியபொழுது மோகனின் பங்கினைக் குறித்த தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தது. மலேகான் குண்டுவெடிப்பில் தனக்கும் தொடர்பு இருப்பதாக மோகன் தெரிவித்திருந்தான்.
முன்னர் மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மும்பை ஏ.டி.எஸ் அப்பாவியான ஒன்பது முஸ்லிம்களை கைது செய்தது. ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக