வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவனுக்கு, ஆசிரியை அளித்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி ஆசிரியை லூ யாலி(வயது 22). சில நாட்களுக்கு முன்பு இவரது வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர், வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்தார். இதனால் கோபமடைந்த ஆசிரியர், மற்ற 50 மாணவர்களையும் அழைத்து குறித்த மாணவனின் கன்னத்தில் அடிக்க சொன்னார்.
இதில் படுகாயமடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மாணவனின் காது மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனின் பாட்டி கூறுகையில், என் பேரன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.
ஆனால் வகுப்பில் இருந்த 50 மாணவர்களையும் அடிக்க சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக