திரூர்(கேரளா):குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கவின் பி டீமாக காங்கிரஸ் செயல்பட்டுவருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
அப்பொழுது அவர் தனது உரையில்,’காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது.காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் மஹராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலைமை, மோடி ஆளும் குஜராத்திற்கு சமமாக உள்ளது. இவ்விரண்டு மாநிலங்களிலும் முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை அரசு சிறையில் அடைத்துள்ளது’ என்று இ.எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக