புதுடெல்லி:மோடி குறித்து நிதீஷ்குமார் கூறிய கருத்து அரசியல் நாடகம் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிரதமர் தேர்தலுக்கான வேட்பாளராக நிற்பதற்கு நரேந்திர மோடி பொருத்தமானவர் இல்லை என்று, ஜனதா தள கட்சி தலைவரும், பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார்
கூறியிருந்தார்.
இதுக்குறித்து கருத்து தெரிவித்த ராம்விலாஸ் பஸ்வான் கூறியது:
“மோடிக்கு எதிராக நிதீஷ் குமார் கருத்துக் கூறியிருப்பது அரசியல் நாடகம். பீகார் மாநிலத்தில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்களின் கருத்தை திசை திருப்பவே அவர் இவ்வாறு பேசி வருகிறார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹிந்து மக்களின் வாக்குகளை மோடி முழுமையாகப் பெற நிதீஷ் போன்றவர்கள் உதவி வருகின்றனர். இப்போது மோடியை எதிர்க்கும் நிதீஷ், 2009-ம் ஆண்டு தேர்தலில் அத்வானியை எதிர்க்காதது ஏன்?’ என்று லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக