வியாழன், ஜூன் 28, 2012

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்

A book prescribed for kindergarten in Manipur portrays a bearded man said to be the Prophet wearing turban and holding a bookஇம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன.

இம்பாலை மையமாகக் கொண்ட பிரைம் பப்ளிகேசன் திங்கட்கிழமைக்குள் தங்களது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என PSO அமைப்பு கெடு விதித்துள்ளது.
பேபிலா ஜஸ்ஸல் என்ற எழுத்தாளரின் அந்த புத்தகத்தில் தாடியுடன் ஒரு மனிதர் தலைப்பாகை அணித்து கையில் புத்தகம் போன்ற ஒரு பொருளை வைத்துக் கொண்டு அவர்தான் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல் ) அவர்கள் என சித்தரிப்பது போல கார்ட்டூன் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
சில தனியார் பள்ளிகளில் இந்த GK  புத்தகம் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இருந்த போதும் இது மணிப்பூர் அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்படவில்லை.
புத்தகத்தின் 51-ம் பக்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மற்ற ஐந்து கடவுள்களுடன் இருப்பது போல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
யாரும் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல எந்த வரை படத்தையும் வரையக் கூடாது இது இஸ்லாத்திற்கு எதிரானது என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவின் தலைவர் முப்தி அர்ஷத் ஹுசைன் கூறினார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல சித்தரித்து வரைவது  இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது என PSO அமைப்பு கூறியுள்ளது. “முஹம்மது நபி(ஸல்) அவர்களை சித்தரித்து வரைவதை இஸ்லாம் தடை செய்துள்ளது” என PSO வின் தலைவர் முஹமது ஃபர்ஹானுதின் கூறினார்.
PSO அமைப்பு அந்த புத்தகத்தை தடை செய்துள்ளது போல அரசாங்கமும் அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என PFI  கோரிக்கை விடுத்தது.
பிரைம் பப்ளிகேசன் தங்கள் அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க தவறினால் அப்பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்படும் என PSO கூறியுள்ளது.
“அவர்கள் மிகப் பெரிய தவறை இழைத்து விட்டார்கள் , அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அது இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவது போன்றது. அவர்கள் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என PSO வின் ஆலோசகர் ரகுமான் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக