புதுடெல்லி:ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமர் வேட்பாளர்
நிதிஷ் குமாரின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோகன் பகவத் கூறுகையில், ‘நிதிஷ் குமாருக்கு தான் ஒரு இந்து என்று கூறிக் கொள்வதில் பயம் இருக்கிறது.
பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆலோசனை நடத்தித் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் நிதிஷ் குமாருக்கு இல்லை.
மேலும் பிரதமர் பதவிக்கு சரியான ஆள் நரேந்திர மோடி தான். இந்துத்துவாவை ஏற்பவர் மட்டுமே பிரதமராக வேண்டும். இந்துத்துவாவை ஆதரிப்பவர் பிரதமராக இருப்பது என்ன தவறு?.
நிதிஷ்குமார் தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசுகிறார்’ என்றார் பகவத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக