புதுடெல்லி:குடியரசு தலைவர் தேர்தலில் 26 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆட்டோ ரிக்ஷா டிரைவரும், டீ கடைக்காரரும் அடங்குவர்.நேற்று மாலை வரை 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் எட்டு மனுக்கள் தள்ளுபடிச் செய்யப்பட்டன. இரண்டு பேர் இரண்டு மனுக்கள் வீதம் தாக்கல் செய்துள்ளனர்.வட இந்தியாவின்
முதல் பெண் ஆட்டோ ரிக்ஷா டிரைவரான சுனிதா சவுதரியும், உடலில் 388 கொடிகளையும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான வார்த்தைகளையும் பச்சைக் குத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ள ரிஷியும், குவாலியரில் டீக்கடைக்காரரான ஆனந்த் சிங் குஷ்வாவும் இதில் அடங்குவர்.
தன்னை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட முன்மொழிந்தவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் பெயர்களை ரிஷி தனது உடலில் பச்சைக் குத்தியுள்ளார்.
எல்லா தேர்தல்களிலும் போட்டியிடும் ஜோகிந்தர் சிங் தர்த்திபகடின் நினைவாக ‘தர்த்தி பகட்’ என்ற பெயரில் பகல்பூரைச் சார்ந்த நகர்மல் கஜோரியா என்பவரும் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக