அங்காரா:துருக்கியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடிக் கொடுப்போம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா ராணுவத்தினரின் புறத்திலிருந்து எதிர்காலத்தில் எல்லையை மீறும் நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான பதிலடி உருவாகும் என துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கடும்
எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
துருக்கியின் ராணுவச் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளோம். சிரியாவின் ராணுவ வாகனங்கள் துருக்கி எல்லையில் நுழைந்தால் தேசப் பாதுகாப்பை சுட்டிக்காட்டி பதிலடி கொடுப்போம் என எர்துகான் தெரிவித்தார்.
தங்களின் வான்வெளி எல்லையில் நுழைந்ததால் துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சிரியா கூறியது. ஆனால், எல்லையை மீறியதாக உணர்ந்தவுடன் திரும்பி பறந்த விமானத்தை சர்வதேச வான் எல்லையில் வைத்து சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி விளக்கம் அளித்துள்ளது. அதேவேளையில் சிரியாவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என்று நேட்டோ ராணுவ கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விவாதிக்க துருக்கியின் கோரிக்கையின் அடிப்படையில் ப்ரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உறுப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது.
பஸ்ஸார் அல் ஆஸாதின் அரசுக்கு எதிராக துருக்கிக்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்க ப்ரஸ் செகரட்டரி ஜே.கார்னே தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசு தமக்கு எதிராக நடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை துருக்கி கடுமையாக விமர்சித்து வருகிறது.
சிரியாவில் இருந்து ராணுவ தளபதி உள்ளிட்டோர் அணி மாறி, துருக்கியில் அடைக்கலம் தேடியுள்ளனர். மேலும் சிரியாவில் இருந்து புலன்பெயர்ந்த 32 ஆயிரம் பேர் துருக்கியில் அபயம் தேடியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக