வியாழன், ஜூன் 21, 2012

பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு- இடதுசாரிகள் கூட்டத்தில் முன்மொழிகிறது !

 Cpm Reaffirms Support Pranab Mukherjee டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.இன்று மாலை நடைபெறும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் பெயரை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழியவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தமது பெயரை திரிணாமுல் காங்கிரஸ்
தலைவர் மமதா பானர்ஜி நிராகரித்துவிட்ட நிலையில் அப்பொழுதே மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் தலைவர்களை பிரணாப் முகர்ஜி ஆதரவு திரட்டத் தொடங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இந்த விவகாரத்தில் கருத்து எதனையும் தெரிவிக்காமல் இருந்து வந்தன. மேற்கு வங்கத்தில் சவாலாக இருக்கும் மமதாவை எதிர்கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோடு கை கோர்க்க வேண்டிய நிலையில் உள்ள இடதுசாரிகள் இருந்து வந்தனர். இப்பொழுது அதற்கான முதல் கட்ட வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் அமைந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக