வியாழன், ஜூன் 21, 2012

இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணியின் மனைவி வரைந்த ஓவியத்திற்கு ரூ.28 கோடியா?

நான் வரைந்த ஓவியங்களை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் 28 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறுவது தவறு. வெறும் இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள, நான்கு ஓவியங்களை மட்டுமே வாங்கியது' என, மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணியின் மனைவி எலிசபெத் அந்தோணி தெரிவித்தார்.
மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மனைவி, எலிசபெத் அந்தோணி. இவர், ஓவியங்களை வரைந்து காட்சிக்கும், விற்பனைக்கும் வைப்பது வழக்கம். அவ்வாறு அவர், டில்லி இந்தியா
ஹாபிடெட் மையத்தில், கடந்தாண்டு, டிசம்பர் 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை, ஓவிய கண்காட்சி நடத்தினார்.
அப்போது, அவரது ஓவியங்களை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் 28 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக, ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து எலிசபெத் அந்தோணி கூறுகையில், "கடந்தாண்டு டிசம்பர் மாதம், டில்லியில் இந்தியா ஹாபிடெட் சென்டரில், நான் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடந்தது. நான்கு நாட்கள் நடந்த இந்த கண்காட்சியில், நான் வரைந்த 24 ஓவியங்கள், 16 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
அப்போது கண்காட்சியை பார்வையிட வந்த, இந்திய விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள், நான்கு ஓவியங்களை, இரண்டரை லட்ச ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர். ஆனால், நான்கு ஓவியங்களை, 28 கோடி ரூபாய்க்கு வாங்கிச் சென்றதாக கூறுவது தவறு. அந்த ஆணையம் வாங்கியதாக, ஆங்கில நாளிதழில் வெளியான, ஓவியம் பற்றிய செய்தியும் தவறு. அந்த ஓவியத்தை, ஆணையம் வாங்கவில்லை.
அந்த ஓவியத்தை தனியார் கலை நிறுவனமொன்று தான் வாங்கியது. அந்த ஓவியத்தை விற்றதில், 95 ஆயிரம் ரூபாய் தான் கிடைத்தது. ஓவிய கண்காட்சி மூலம் கிடைத்த தொகை, புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.' இவ்வாறு எலிசபெத் அந்தோணி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக