புதுடெல்லி:டெல்லி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உள்துறை அமைச்சக அலுவலக கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2-வது மாடியில் உள்ள மினி கான்ஃபரன்ஸ் ஹாலில் ஏற்பட்ட தீ மளமளவென எரிந்து அந்த வளாகம் முழுவதும்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை. எனினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக