இம்பால்:மணிப்பூர் மாநிலத்தில் முழங்கால் தெரியும் அளவுக்கு ஆபாசமாக யூனிஃபார்ம்(சீருடை) அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் அமைப்புகள் இது தொடர்பாக மாணவிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. ஆபாச சீருடையை தவிர மொபைல் ஃபோனை கல்வி நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் ஆபாசமான உடைகளை அணிவதற்கு தடை விதிக்க ஆறு மாணவர் அமைப்புகள் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
பாதம் வரை அணியப்படும் பானெக்(phanek) என்கிற பாரம்பரிய உடையைத்தான் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வர வேண்டும். முழங்கால் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட எந்தப் பள்ளி, கல்லூரி சீருடையையும் ஏற்க இயலாது என்று மாணவர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருக்கிறது.
ஆல் மணிப்பூர் ஸ்டுடன்ஸ் யூனியன், டெமோக்ரெடிக் ஸ்டுடன்ஸ் அலயன்ஸ் ஆஃப் மணிப்பூர், மணிப்பூர் ஸ்டுடன்ஸ் ஃபெடரேசன் உள்ளிட்ட மாணவர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ஆபாச உடையை மாணவிகள் அணிவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருட்களை விற்பதற்கும் தடை விதித்துள்ளது.
2001-ஆம் ஆண்டு மணிப்பூரில் கெ.ஒய்.எம்.எல் என்ற புரட்சிகர அமைப்பு பானெக் என்ற பாரம்பரிய உடையை அணியாதவர்களை கொலைச் செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக