யங்கூன்:மேற்கு மியான்மரில் பெளத்த மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையே உருவான கலவரத்தில் 90 ஆயிரம் பேர் தமது வசிப்பிடங்களை விட்டு புலன் பெயர்ந்துள்ளதாக துயர்துடைப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு மியான்மரில் உள்ள ராக்கேன் மாகாணத்தில் அண்மையில் பெளத்தர்களுக்கும் ரோஹிங்கியா
முஸ்லிம்களுக்கும் இடையே உருவான கலவரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொலைச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏராளமானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் இவ்வாறு புலன்பெயர்ந்துள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தாம் அவசரகால உணவு உதவிகளை வழங்கியுள்ளதாக உலக உணவுத் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
ராக்கேன் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை என கூறி மியான்மர் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
மியான்மரில் இருந்து வெளியேறி தமது எல்லைக்குள் நுழைவதற்கு முயற்சித்த மக்களை வங்கதேசம் திருப்பி அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக