வியாழன், ஜூன் 21, 2012

அடிடாஸின் புதிய ஷூ வடிவமைப்பிற்கு கண்டனம் !

Olympic sponsor scraps ‘slave shoes’நியூயார்க்:அடிடாஸ் நிறுவனம் கடந்த வாரம் அடிமைகள் அணியும் காலனி போன்ற வடிவத்தை உடைய ஷூ ஒன்ற வெளியிட்டு இருந்தது. இதனை பலரும் விமர்சித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிடாசின் பேஸ்புக் பக்கத்திலும் மற்றும் இணையதளத்திலும் அடிடாசின் இந்த வடிவமைப்பு 16-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கறுப்பின அடிமைகளுக்கு அணிவிக்கப்பட்ட காலனி போன்று தோற்றம் அளிப்பதாக பலர் கடுமையாக விமர்சித்து
இருந்தனர்.
இது குறித்து இணையதளத்தில் கேய் டி என்னும் நபர் வெளியிட்டுள்ள விமார்சனத்தில் அடிடாஸ் கறுப்பின மக்களுக்கு எதிராக வடிவமைத்துள்ள சூவைப் போன்று ஜீவ்களின் சின்னமான ஸ்வதிகை ஷூவில் இட்டு வெளியிடட்டும் பின்பு பாக்கலாம் ஜீவ்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சயரகிசே பல்கலைகழகத்தின் பேராசிரியரான போய்சே வாட்கின்ஸ் தான் அடிடாசின் இந்த செயலால் மன உளச்சலுக்கு உள்ளதாகவும். இது கறுப்பினத்தவர்கள் 400  வருடங்களாக அனுபவித்து வந்த கொடுமைகளை நினைவு கூர்வதாகவும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடிடாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன் தனது ஷூ தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று 2012-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆடைகளை அடிடாஸ் ஜெர்மன் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் அந்நிறுவனம் இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளர்களை அடிமையாக வைத்து வேலை வாங்குவதாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியின் அமைப்பாளர்கள் இது பற்றி விசாரணை செய்யுமாறு அடிடாஸ் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவின் போபால் விஷ வாயு பிரச்சனையில் சிக்கியிருக்கும் டோ நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றது தொடர்பாக எதிர்ப்புகளை ஒலிம்பிக் அமைப்பு சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக