கெய்ரோ:புதிய அதிபரை நியமித்த பிறகு அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க எகிப்தின் ராணுவ தலைமை திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு கட்சிகளின் நடவடிக்கைகளை ராணுவ தலைமை நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்த நடவடிக்கை இதனை சூசகமாக உணர்த்துவதாக கார்டியன்
கூறுகிறது.
பாகிஸ்தானைப் போல ராணுவத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை எகிப்து ராணுவம் மேற்கொண்டுள்ளது.
எக்ஸ்ட் போலில் முர்ஸி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளதாகவும், அவ்வாறு முர்ஸி அதிபரானால் சட்டம் நிர்மாணம் மற்றும் நீதித்துறையை தம் வசம் வைத்திருக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும் கார்டியன் தெரிவிக்கிறது.
ஷஃபீக் வெற்றிப் பெற்றதாக அறிவித்தால் அது கடந்த கால ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியாக அமையும் என கார்டியன் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக