இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் பதவியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பறித்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மக்தூம் ஷஹாபுதீனை நியமிக்க ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.கிலானியின் பதவி பறிப்பை தொடர்ந்து, அதிபர் ஆசிப் அலி சர்தாரி தலைமையில் இன்று காலை நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷஹாபுதீனை
பிரதமராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
புதிய பிரதமராக ஷஹாபுதீனை முறைப்படி தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நாளை கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக