வியாழன், ஜூன் 28, 2012

புற்று நோயிலிருந்து மீண்டார் வெனிசுலா அதிபர்: மீண்டும் தேர்தலில் போட்டி !

புற்று நோயிலிருந்து மீண்டார் வெனிசுலா அதிபர்: மீண்டும் தேர்தலில் போட்டிவெனிசுலா நாட்டின் அதிபர் ஹூகோ சவேஸ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் உடல் நிலை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாமல் அமைதி காத்து வந்தார்.தற்போது அவர் பூரண சுகம் பெற்று, வரும் அக்டோபர் மாதம் 7-ந் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தயாராகி விட்டார். இதை அவரே அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "புற்றுநோய்க்காக நான் இனி சிகிச்சை பெற வேண்டியதில்லை. தேவையான சிகிச்சைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது எனது குறிக்கோள் எல்லாம் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதுதான்'' என்றார்.
 
ஹூகோ சவேஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிக் போட்டியிடுகிறார். இருப்பினும், ஹூகோ சவேஸ் மீண்டும் வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக