திங்கள், ஜூன் 25, 2012

ராணுவ மரியாதைகளுடன் எனது உடலை அடக்கம் செய்யவேண்டும்: முபாரக் !

ராணுவ மரியாதைகளுடன் எனது உடலை அடக்கம் செய்யவேண்டும்-முபாரக்!கெய்ரோ:தனது உடலை அனைத்து வித ராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யவேண்டும் என்று எகிப்தில் ராணுவ மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவரும் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.நினைவிழந்து இருந்த முபாரக்கிற்கு நேற்று நினைவு திரும்பியது. உடனே அவர் ராணுவ தலைவர் தன்தாவியை உடனடியாக காணவேண்டும் என்றும், அவரிடம் ஒரு
அத்தியாவசியமான காரியத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மிகவும் உச்சபட்ச குரலில் அவர் பேசினார். இவரது சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி, அருகில் உள்ள அறைகளில் இருந்த மருத்துவர்களும் முபாரக் அருகே வந்தனர். அப்பொழுது அவர் தன்னை ராணுவ வீரனுக்கு அளிக்கும் மரியாதைகளை வழங்கி அடக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக