புதன், ஜூன் 20, 2012

பாகிஸ்தானின் பிரபல பாடகி தந்தையுடன் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பிரபல பாடகி ஒருவர் தந்தையுடன் மர்மநபர்களால் சுட்டுக்‌‌கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் புகழ்பெற்ற பாஸ்தோ மொழிப்பாடகி கஸாலாஜாவியத்.இவரது தந்தை முகமது ஜாவியத் ஆகியோர் , அழகுநிலையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவர்கள் இருவ‌ரையும் சுட்டுக்கொன்றனர்.
பாஸ்தோ மொழி , மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பாக்.ஈரானிய மக்கள் பேசும் மொழியாகும். இம்மொழியில் சிறந்த பாடகியான கஸாலா
ஜாவியத். இவர் தனது தந்தை, மகள் சகோதரியுடன், பெஷாவர் நகரின் தபாகரி பஜாரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர்ஒன்றிற்கு சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில்வந்த மர்ம நபர்கள் பாடகி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கஸாலா மற்றும் அவரது தந்தை முகமது ஜாவியத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ‌சகோதரி பர்ஹத்பீவி காயமடைந்தார் இவர் பெஷாவரைச் சேர்ந்த ஜஹாங்கீர்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக