சனி, ஜூன் 30, 2012

ஒரு லட்சம் மக்கள் முன்பு உறுதிமொழி எடுத்து பதவியேற்ற புதிய எகிப்து அதிபர் முகமது முர்சி !

எகிப்தில் கடந்த ஆண்டு மக்கள் புரட்சியின் மூலம் அதிபர் முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது முர்சி வெற்றி பெற்றார்.எகிப்தில் இவர்தான் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அதிபராக பதவி ஏற்கிறார். அதற்குமுன் நேற்று அவர் பொதுமக்கள் முன்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.  
 
முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில்தான் மக்கள் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்சி தலைமை தாங்கினார். எனவே, போராட்டம் நடைபெற்ற அந்த மைதானத்தில் மக்கள் முன்பு தோன்ற விரும்பினார். எனவே அங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர்.  
 
அவர்கள் முன்பு முகமது முர்சி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நான் அனைத்து எகிப்தியர்களுக்கும் சிறந்த அதிபராக திகழ்வேன். பணியில் நேர்மையாக நடந்து கொள்வேன். மக்கள் மீது பழங்கால சட்ட திட்டங்கள் புகுத்தப்பட்டது. ராணுவத்தின் அதிகார வரம்பு பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்கும்.
 
நான் ஒரு போதும் அதிபருக்கு உரிய அதிகார வரம்பில் இருந்து மீற மாட்டேன். எனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக