வெள்ளி, ஜூன் 29, 2012

எகிப்தின் தலைவர் மக்களது பணியாளராகவே இருப்பார் : முர்ஸியின் மனைவி நஜ்லா அலி மஹ்மூத் !

Najla2எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சார்பாகப் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்ற கலாநிதி முஹம்மத் முர்ஸியின் மனைவியே நஜ்லா. இவர் 1962 ஆம் ஆண்டு கெய்ரோவின் கிழக்குப் பகுதியான ஐனுஸ் ஷம்ஸ் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய முழுப் பெயர் நஜ்லா அலி மஹ்மூத்.கலாநிதி முர்ஸி தனது கலாநிதிப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய அமெரிக்கா சென்றபோது அவருடன் அங்கே சென்று வாழ்ந்தார். முபாரக்கின் ஆட்சியில் பல்வேறு சோதனைகளை கலாநிதி அவர்கள் சந்தித்தபோதும் மனம் தளராமல் அவருக்கு ஆறுதலாக இருந்தவர் நஜ்லா அவர்கள். அவரோடு இஹ்வான் ஒன்லைன் மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காகத் தருகிறோம்
.
கலாநிதி முர்ஸியை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது எனத் தீர்மானம் எடுக்கப்பட்ட போது அத்தீர்மானத்தை உங்களது குடும்பம் எவ்வாறு எடுத்துக் கொண்டது?
மனிதனின் இயல்புஅது சோதனைகளை விரும்புவதில்லை. நாங்கள் அத்தீர்மானத்தை முழுத் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அனைவரும் ஜமாஅத் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களுக்கும் உடன்படுபவர்கள்.
இஹ்வான்களது வேட்பாளருக்கு நாம் உதவி செய்வோம். அது முர்ஸியாக இருந்தாலும் ஹைரத் ஷாதிராக இருந்தாலும்அவர்களல்லாத வேறு யாராக இருந்தாலும் எங்களுக்கிருக்கின்ற சக்தி,ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி கடைசி வரைக்கும் ஒத்துழைப்போம்.
கலாநிதி முர்ஸியிடம் நாட்டின் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் இருப்பதாக கருதுகிறீர்களா?
கலாநிதி முர்ஸி பழுத்த அரசியல் சாணக்கியம் மிக்கவர். எவ்வளவோ சோலியாக இருந்தாலும் செய்திகளை அறிவதிலும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதிலும் நிகழ்வுகளைப் பகுப்பாய்வதிலும் அவர் ஆர்வம் காட்டினார். நாட்டின் தலைவருக்கு இருக்க வேண்டிய எல்லாத் தகைமைகளையும் கொண்ட மனிதராக அவரைத் தினமும் நான் கண்டு வருகிறேன்.
எனது வாழ்க்கையில் நான் சாதித்த முக்கிய அடைவு எனது மனைவி என்று கலாநிதி முர்ஸி அடிக்கடி கூறுவார். இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இது எமது குடும்பத்திற்கு அல்லாஹ் அளித்த அருளாகும். கலாநிதிப் படிப்பிற்காக அவரோடு அமெரிக்கா சென்றபோது நான் அவருடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளை அவர் அடிக்கடி நினைவு கூருவார். அவர் கலாநிதிப் படிப்பிற்காக ஆய்வைச் சமர்ப்பிக்கும் தறுவாயில் நான் எனது முழு சக்தியையும் அவருக்கு உதவுவதில் செலவழித்தேன்.
அதேநேரம்நாம் தஃவாப் பணிகளில் கஷ்டமான முக்கிய பொறுப்புக்களை சுமந்திருந்தோம். அமெரிக்க வாழ்க்கையின் கவர்ச்சிகளை தூக்கி வீசி விட்டு நாட்டுக்குத் திரும்பி எமது முயற்சிகளைச் செலவழிப்பதே மிகப் பொருத்தமானது என நாம் கருதினோம்.
நாம் அங்கு ஒன்றாக வாழ்க்கைக் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஒருபுறம் அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அநியாயங்களும். அவர்கள் எங்களை சிறை பிடித்தனர்அச்சுறுத்தினர். எனினும்,அல்லாஹ் எங்களுக்கு பொறுமையைஉறுதியைத் தந்தான். தொடர்ந்து வெற்றியையும் தந்தான்.
Najla1ஊடகங்களும் தொலைக்காட்சி சேவைகளும் கலாநிதி முர்ஸியிற்கு எதிராக மோசமான ஊடகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இது உங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?
எப்போதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இப்படியான மனிதர்களின் சதித்திட்டங்களுக்கு அல்லாஹ்வே பதிலளிக்கிறான். அவர்கள் ஒருவரின் ஆளுமையில் குறைகாண அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றனர். ஊடகங்கள் அநியாயம் இழைக்கப்பட்டிருக்கின்றன. சத்தியத்தைத் தேடுகின்றன. அவை அடக்கப்பட்டுள்ளன. எகிப்தின் ஊடகங்கள் குறித்து என்னிடத்தில் நம்பிக்கை குறைவு.
இவை எப்படியிருப்பினும் இஸ்லாத்தின் கண்ணியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். நாம் சரியான பாதையிலே இருக்கிறோம் எனும் நம்பிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இஹ்வான்களது திட்டத்தை நான் முழுமையாக நம்புகிறேன். நபியவர்களின் ஸீறாவை சரியாக வாசிப்பவர்கள் சோதனைகள்இறை நியதி என்பதைப் புரிந்து கொள்வர். அது மேலும் எமது சக்தியை அதிகரிக்கிறது.
கலாநிதி முர்ஸிநீங்கள் பல்கலைக்கழக படிப்பைத் தொடர்வதற்கு தடை விதித்தார் எனக் கூறப்படுகிறது. இது சரிதானா?
நான் உயர்தரப் பரீட்சையை முடித்த பின் நேரடியாக அமெரிக்கா சென்றேன். அங்கு ஆங்கில மொழியை விஷேட பாடமாக எடுத்தேன். பிறகு லொஸ் ஏன்ஜல்ஸில் நடந்த வாராந்த வகுப்பில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்கப் பெண் மணிகளுக்கு சமகால மொழிபெயர்ப்பாளராக நான் கடமையாற்றினேன்.
நான் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் பல்கலைக்கழக படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். எனினும்எனது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு நேரம் ஒதுக்குவதையே சிறப்பாகக் கருதினேன். நானும் எனது பிள்ளைகளும் குர்ஆனை முழுமையாக மனனமிட்டோம். உயர்தரம் வரை நானே அவர்களுக்கு பாடம் நடத்தினேன். இக்கால இடைவெளியில் நான் இஹ்வான்களுடன் எனது தஃவா பணியை ஆரம்பித்தேன். அதுவே எனது தொழிலாகவும் இருந்தது.
கலாநிதி முர்ஸியைப் பொறுத்தவரைநான் எனது படிப்பை முடிக்கும் விடயத்தில் என்னைத் தடுக்கவில்லை. அவர் இந்த விடயத்தில் தலையிடவே இல்லை. மாற்றமாகநான் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று கேட்டபோது அவர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அமெரிக்கக் குடியுரிமையைப் பெற வேண்டும் என்பது அங்கு வாழ்கின்றவேலை செய்கின்ற நிறையப் பேரின் கனவாக உள்ளது. நீங்கள் அதைப்பெற முயற்சிக்க வில்லையா?
அமெரிக்காவில் பிறந்த ஒரு வருக்கு அமெரிக்க சட்டம் குடியுரிமை வழங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே. இவ்விடயம் எனது மகன் அஹ்மத்மகள் ஷீமாவுக்கும் பொருந்தும்.
எம்மைப் பொறுத்தவரைஅக்குடியுரிமையை இலகுவாகப் பெற முடியுமாக இருந்தது. நாம் அதனைப் பெறுவதற்கு ஒரு எட்டுக் கூட வைக்கவில்லை. நாம் வெளிநாட்டுக் குடியுரிமையை பெற்றுள்ளதாகக் கூறும் ஆவணங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு நான் சவால் விட்டேன்.
Najla2புரட்சிக்குப் பின்னரான எகிப்து ஜனாதிபதியுடைய மனைவியின் பணி எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
நான் மக்களுடன் இருக்கவும் அவர்களுடன் வாழவுமே விரும்புகிறேன். அவர்களது கவலைகளைச் சுமந்திருக்கிறேன். பக்தாத் வீதியில் கோவேறு கழுதை யொன்று சறுக்கி விழுந்தாலும் அது குறித்து நான் வினவப்படுவேன் எனக்கூறிய உமர் (றழி) அவர்களின் கூற்றை இங்கு நினைவு படுத்துகிறேன்.
உங்களது தஃவாப் பணி குறித்து என்ன கூறுகிறீர்கள்?
தஃவா செயற்பாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்தும் நான் உழைப்பேன். அதிலிருந்து விடுபட முடியாது. 30 வருட காலமாக எனது வாழ்க்கை இதுவாகவே இருக்கிறது.
எகிப்தின் முதற் பெண்மணியாக ஆக வேண்டும் என எப்போதாவது நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களாஅன்றைய தினம் உங்களது உணர்வு எப்படியிருக்கும்?
இப்பட்டத்தை நான் முற்றாக மறுக்கிறேன். ஏனெனில்அது ஜிஹான் ஸதாத்திற்கும்சுஸான் முபாரக்கிற்கும் சூட்டப்பட்ட பட்டம். அவர்கள் எல்லா விடயங்களிலும் தலையிட்டனர். வரப்போகும் தலைவர் எகிப்தின் பணியாளராகவே இருப்பார்.
அதன் கருத்து அவரது மனைவியும் எகிப்தின் பணிப்பெண்ணாக இருப்பார் என்பதுதான். எம்மீது திணிக்கப்படும் எல்லாப் பட்டங்களுக்கும் முடிவிருக்கிறது. எமது அரசியல்சமூக அகராதியிலிருந்து அவை மறைந்து விடக்கூடியவை.
உங்களது பார்வையில் வரப்போகும் ஜனாதிபதியை அதிஷ்டம் மிக்கவராகப் பார்க்கிறீர்களா?
இல்லை. எகிப்தின் தலைமையைப் பொறுப்பெடுப்பவர் எகிப்து தற்போதிருக்கின்ற சூழலில் அதிஷ்டக்காரராக இருக்க முடியாது.
முர்ஸியின் குடும்பம் பல வருடங்களாக அநியாயத்திற்கு உட்பட்டது. அநியாயக்கார சர்வாதிகாரி வீழ்ந்துபோனபோது உங்களது உணர்வு எப்படியிருந்தது?
அந்நேரம் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைத்தான் நினைவு படுத்திக் கொண்டேன். நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ்வே ஆட்சியை வழங்குபவன். நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறாய். விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்தெடுக்கிறாய் (ஆலஇம்ரான்: 26).
இதிலிருந்து நாம் கற்றுக் கொண்டதுஅதிகாரம் யாருக்கும் சொந்தமாக இருப்பதில்லை என்பதைத்தான். அல்லாஹ் நாடினால் ஆட்சியைப் பறித்தெடுத்து அதனை முடித்து வைக்கிறான். பிறகு அந்த ஆட்சியாளர்களால் அநியாயத்திற்கு உட்பட்டவர்களுக்கு அவர்களது மனதை ஆறுதல்படுத்துவதற்கு அவனது விருப்பப்படி அதனை வழங்கி விடுகிறான்.
ஹைரத் ஷாதிரும்ஹஸன் மாலிக்கும் சிறையிலிருந்து தாமதமாகவே விடுதலை செய்யப்பட்டனர். 2010 தேர்தலில் மோசடி செய்த அந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் பாடம் படிப்பித்தான். முபாரக் கட்டிலில் படுத்த நிலையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அவரது சட்டத்தரணி அவரை மறைக்க முயல்கிறார்.
இந்தக் காட்சியைக் கண்டபோதுஹைரத் ஷாதிரும் இஹ்வான்களும் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கும் காட்சியுமே என் நினைவிற்கு வந்தன. இவை யெல்லாம் அல்லாஹ்வின் வெற்றி நிச்சயம் வரும் என்ற உறுதியைத் தந்தது.
கலாநிதி முர்ஸியைப் பற்றி சில வார்த்தைகளில் சொன்னால்?
அவர் மிகச் சிறந்த தந்தை. மிகச் சிறந்த கணவன். மிகச் சிறந்த மகன். அண்டை வீட்டாருக்கு மிகச் சிறந்தவர். மிகச் சிறந்த தொண்டன். அண்டை வீட்டாருக்கு ஒரு தடவை கூட அவர் தவறு செய்ததில்லை. அவரது தாய் அவரது பிள்ளைகளில் மிகச் சிறந்தவராக அவரைக் கருதினாள்.
இவை 21 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையொன்றுக்கு நான் சொன்ன வார்த்தைகள். தொடர்ந்தும் அவ்வார்த்தைகளைத்தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரது பெற்றோர் அவரைப் பொருந்திக் கொண்ட நிலையிலேயே மரணித்தனர். அவரது சகோதரர்கள் அவரைத் தந்தையாகப் பார்க்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை அவர் எனது முதுகெலும்பு. எனது குழந்தைகளுக்கு அவர்தான் உலகமும் அதிலுள்ள அனைத்தும்.
முர்ஸியின் வாழ்க்கையில் பாதிப்புச் செலுத்தியவர்கள் யார்?
அவர் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்தான்என் தாய் தான் எனக்குக் கற்றுத் தந்தாள் என்பது. அவரது தாய் சாதாரணமான ஒருவராக இருந்தாலும் அநியாயம் இழைக்காமல் எப்படி பலசாலியாக இருப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
பலவீனப்படாமல் எப்படி மென்மையானவனாக இருக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்திருக்கிறார். சகிப்புத்தன்மை மிக்கவராகவும் பொறுமைசாலியாகவும் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பிறரை மன்னிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் எப்படி உதவுவது என்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
நீங்கள் ஆற்றிய பணி போதும்’ என்று எப்போது கலாநிதி முர்ஸியிடம் சொல்வீர்கள்?
நீங்கள் ஆற்றிய பணி போதும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். இஸ்லாம் இறுதிக் கணப்பொழுதில் கூட செயற்படுமாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளது. நாம் இறை திருப்திக்காக உழைப்பவர்கள். இயங்காத நிலையில் கலாநிதி முர்ஸியை என்னால் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எனக்கு அந்நியமான ஒருவராகவே அவரை நான் காண்பேன்.
கலாநிதி முர்ஸியின் வாழ்க்கையில் பெண்களுடன் அவர் எப்படி நடந்து கொண்டார்?
கலாநிதி முர்ஸி அவர்கள் பெண்களை மிகவும் மதிப்பவர். எப்போதும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பவர். மகள் ஷீமா அவருக்கு மிக நெருக்கமான பிள்ளை. அவர் புரிந்துணர்வு மிக்க ஒரு கணவர். வீட்டு வேலைகளில் எனக்கு உதவி செய்வார்.
கடைசியாகஉங்களது கணவனுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இப்பொறுப்பில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக. உங்களை உறுதிப்படுத்துவானாக. உங்களைப் பொருந்திக் கொள்வானாக. அப்பொறுப்பில் உங்களுக்கு உதவியாக எம்மை ஆக்கி வைப்பானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக