எத்தியோப்பியாவில் இணையத்தி னூடாக ஒலிப்பரிமாற்ற சேவையை பயன்படுத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன் மூலம் எத்தியோப்பியாவில் 30 வினாடிகள் ‘ஸ்கைப்’ இணையத்தளத்தி னூடாக உரையாற்றினால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.தேசிய பாதுகாப்பை
வலுப்படுத்தவே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எத்தியோப்பிய அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் எத்தியோப்பியாவில் தொலைத் தொடர்பாடல் சேவையில் ஏக போக உரிமையை கொண்டுள்ள அரசு இணையவழி ஒலிப்பரிமாற்ற சேவையால் கடும் வருவாய் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக