புதன், ஜூன் 27, 2012

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார் !

 Finance Minister Pranab Mukherjee R டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தமது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்துக்கு மாலையில் சென்ற பிரணாப் முகர்ஜி அதன் பினன்ர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக்
கொடுத்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. இன்று நிதி அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்யும் நிலையில் அடுத்த நிதி அமைச்சர் யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக பிரதமர் மன்மோகன்சிங்கே நிதி அமைச்சக பொறுப்பையும் தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது. மன்மோகன்சிங்கிடம் தமது பொறுப்புகளை பிரணாப் ஒப்படைக்கக் கூடும்.
அப்படி மன்மோகன்சிங்கே கூடுதல் பொறுப்பை ஏற்கும் நிலையில் பிரதமர் அமைச்சகத்துக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும். ஏனெனில் பல்வேறு அமைச்சர் குழுக்களுக்கு பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ஜி, 3ஜி ஏலம் விடுவது தொடர்பாக அமைச்சர்கள் குழுவுக்கும் பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக