டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப் போவதாக பாரதிய ஜனதாவின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜ்னதா தளம் அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், தற்போதைய சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜியை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்கிறோம் என்பது அர்த்தம் அல்ல என்றார். மேலும்
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாம் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்த பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றும் சரத்யாதவ் சுட்டிக்காட்டினார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா ஏற்கெனவே பிரணாப்பை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது. பாரதிய ஜனதா, அகாலி தளம், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா ஆகியவை சங்மாவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமும் தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக