பெங்களூர்:சட்ட விதிமுறைகளை மீறி அரசு வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகா மாநில பா.ஜ.க அரசு சட்டத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தனது பதவியை நேற்று(சனிக்கிழமை) ராஜினாமா செய்தார்.சுரேஷ்குமார், னது தாய் சுசீலாம்மா, மகள் திஷா குமார் ஆகியோர் பெயரில் 2 வீட்டு மனைகள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், அவற்றை மறைத்து கர்நாடக முதல்வரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் ‘ஜி’ பிரிவு மனையை சுரேஷ்குமார் பெற்றுள்ளார். இதன்
மூலம், ராஜ்மகால் விலாஸ் 2-வது ஸ்டேஜில் உள்ள பெங்களூர் வளர்ச்சி ஆணையத்துக்குரிய ரூ. 3 கோடி மதிப்புள்ள 4,000 சதுர அடி வீட்டு மனையை ரூ. 10 லட்சத்துக்கு எஸ். சுரேஷ்குமார் பெற்றுள்ளார். எனவே, அந்த மனை ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எஸ். பாஸ்கரன், கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா மற்றும் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தப் புகார் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக எஸ். பாஸ்கரன் அளித்திருந்த பேட்டி, ஆங்கில நாளிதழில் சனிக்கிழமை வெளியானது. இதையடுத்து, மாநில அமைச்சர் சுரேஷ்குமார், தனது ராஜிநாமா கடிதத்தை கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவிடம் நேரில் வழங்கினார்.
இந்நிலையில் சுரேஷ்குமார் ராஜினாமாவை முதலமைச்சர் சதானந்த கெளடா ஏற்க மறுத்துவிட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சுரேஷ்குமார், உண்மையை வெளியே கொண்டுவர இதுபற்றி விசாரணை நடத்தட்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக