புதன், ஜூன் 20, 2012

சீனா: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கும்பல் தலைவிக்கு தூக்கு தண்டனை !

223 children, the death penalty sellசீனாவில் 223 குழந்தைகளை கடத்தி விற்ற கும்பல் தலைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் இருந்து ஏராளமான குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி ஹெனான் மாகாணத்தில் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீசார் 35
பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். 223 குழந்தைகளை அவர்கள் கடத்தியது தெரியவந்தது.
ஆண் குழந்தைகளை ரூ.2 லட்சம் லாபம் வைத்தும், பெண் குழந்தைகளை ரூ.1.75 லட்சம் லாபம் வைத்தும் விற்றுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கும்பல் தலைவியாக செயல்பட்ட ஜியாங் கைசி என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக