செவ்வாய், மார்ச் 22, 2011

வண்ணத்துப் பூச்சி

 

வண்ணத்துப் பூச்சி
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர.

திருடன் போலிஸ்
அம்மா அப்பா
கண்ணா மூச்சு


 
எதுவும் விளையாடத் தெரியாத
என் குழந்தை
கம்ப்யூட்டரில்
கார் ரேஸிங்கில். . .

சுடும் மணல் நதி
மதிய நேரப்பாறை
எதிலும் பாதம் பட்டு
சூடுபடாத என் குழந்தை
 
கட்ஷுக்குள்
வெந்து போனது

முருங்கை மரம் ஏறி விழுந்து
கை ஒடிந்தவன்
மறுநாள்
மாவுக் கட்டுடன் பள்ளிக்கூடத்தில்

பாத் ரூமில்
வழுக்கி விழுந்த
என் குழந்தை
பெட்ரெஸ்டில் பத்து நாள்
 
நகரத்தில்
எல்லா வசதியுடன்
வாழ்கிறது என் குழந்தை
வாழ்க்கையைத் தவிர. . .

- அப்பாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக