இந்தோனேசியா: இந்தோனேசியாவின் காம-லாமா எரிமலை வெடித்து சிதறியதால், அந்தப் பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஐயாயிரத்து 650 அடி உயரமுள்ள, சீற்றம் மிகுந்த காமலாமா எரிமலை, நேற்றில் இருந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்பும், கரும்புகையும் வெளியாகி வருகிறது.
இதனால் எழுந்த சாம்பல், பல கிலோ மீட்டர் தூரம் வரை பரவி உள்ளது. எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட மலூக்கு மாநிலத்திலுள்ள, டேர்நெட் நகரிலுள்ள விமான நிலையம், இன்று மூடப்பட்டது. மேற்கொண்டு எரிமலை வெடிக்காமல் இருந்தால், விமான நிலையம், நாளை திறக்கப்படுமென்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக