கேரளாவில் பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தின் அநியாயமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரை விடுதலை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம் கேரளா தலைமை செயலகம் முன்பு நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு திருவனந்தபுரம் மாவட்ட தலைவர் ஷாஜஹான் தலைமை வகித்தார,மாநில கமிட்டி உறுப்பினர் ஜோதீஸ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூவாற்றுபுழா அஸ்ரப் மொவ்லவி உரையாற்றுகையில் கிருஸ்துமஸ் கொண்டாட இந்திய மீனவர்களை அநியாமாக சுட்டுகொன்ற இத்தாலி கடல்படை வீரர்களை அவர்களுக்கு நாட்டுக்கு அனுப்பும் இந்திய அரசு எந்த குற்றமும் செய்யாத உடல் நிலை மிகவும் பாதிக்கபட்டுள்ள ஒரு கால் இல்லாத நிலையில் மிகவும் அவதியுறும் மஃதனிக்கு ஜாமீன் கொடுக்க மறுப்பது ஏன்?
ஏற்கனவே எந்த தவறும் செய்யாத மஃதனி கோவை குண்டு வெடிப்பில் 9 வருடம் விசாரணை கைதியாகவே சிறையில் கழித்துள்ளார் பிறகு அவர் மீது குற்றம் நிருபிக்க படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார் அதே போலதான் இப்பொழுது அவர் விசாரணை கைதியாகவே சிறையில் அடைக்க ப் பட்டுள்ளார் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு மத்திய ,மாநில அரசுகள் உடனே அவருக்கு ஜாமீன் வழங்க முயற்சி எடுக்க வேண்டும் என தனது உரையில் கூறினார். இந்த மாவட்ட ,நகர நிர்வாகிகள் உள்பட திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர் இறுதியில் நகர தலைவர் நன்றியுரை ஆற்றினார்
ஆர்ப்பாட்டம் பற்றி தினகரனில் வந்த செய்தி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக