ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜுலியா கிலார்டு அறிவித்துள்ளார். இதுகுறித்து கேன்பராவில் தேசிய ஊடக அரங்கில் அளித்த பேட்டியில், தேசிய பிரச்னைகளில் வாக்காளர்கள் அதிக கவனம் செலுத்தி, தங்கள் வாக்குகளை யாருக்கு செலுத்துவது என்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பொருளாதார கொள்கைகளை முன்னிறுத்தி தங்கள் கட்சி இத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தேர்தலில் விக்கலீக்ஸ் இணையத்தள நிறுவனர் ஜூலியன்அசாஞ்ச் போட்டியிட போவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள அசாஞ்ச், எப்போது அவுஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறித்து தகவல் ஏதுமில்லை. 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக