பெங்களூரு:கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பத்மநாப பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கட்சியின் தலைவராக எடியூரப்பா சரியாக செயல்படாததால், அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இனி கர்நாடக ஜனதா கட்சிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
என்றும் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். எனினும் பிரசன்ன குமாரின் இந்த அறிவிப்பு தவறானது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேந்திர கோகலே தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவியை கடந்த ஆண்டு நவம்பர் 9 தேதியே பிரசன்ன குமார் ராஜினாமா செய்து விட்டதாகவும், அதன் பிறகு புதிய தலைவராக தனஞ்செயகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து கர்நாடக ஜனதா கட்சியின் தலைவராக டிசம்பர் 10 தேதி எடியூரப்பா முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாகவும், மறுநாள் கட்சியின் பொதுக்குழு அதனை அங்கீகரித்ததாகவும் கோகலே குறிப்பிட்டுள்ளார். புதிய கட்சிக்கு கர்நாடக ஜனதா கட்சி என பெயரிட விரும்பிய எடியூரப்பா, அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக