செவ்வாய், ஜனவரி 22, 2013

பிரதமரை அடிக்கவா முடியும்? : மம்தா !!

கொல்கத்தா: "விலை  உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை நான் அடிக்கவா முடியும்?" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ்  கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாவிலம் கன்னிங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உரவிலை உயர்வு தொடர்பாக கூறுகையில், "உரங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பது உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கை நான் 10 முறை சந்தித்து விட்டேன்.ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. 

இதற்காக நான் பிரதமரை அடிக்கவா முடியும்?அப்படி செய்தால் நீங்கள் என்னை ரௌடி என்றுதான் அழைப்பீர்கள். நான் ஒன்றும் செய்யாமல் இருக்கும்போதே என்னை அப்படித்தான் கூறி வருகிறீர்கள்.ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. உர விலை உயர்வைத் தடுக்க மாநிலத்திலேயே உரத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.இதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக